கோயம்புத்தூர், ஏப்ரல் 15
கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் அருகாமையில் அமைந்துள்ள நான்கு முனை சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் முறையாக செயல்பட்டு வந்தாலும், சில வாகன ஓட்டிகள் அதனை புறக்கணித்து செல்லும் நிலை காணப்படுகிறது.
தனியார் வாகனங்கள் மட்டுமின்றி ஒரு சில அரசு பேருந்துகளும் சிக்னலை மீறி செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்தப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், இச்சந்திப்பில் பாதுகாப்பாக சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.