களியக்காவிளை, பிப்- 27
களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த கோயில் சிவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று நான்கு யாம பூஜையினை திருவிதாங்கூர் மகராணி பூயம் திருநாள் கெளரி பார்வதி பாய் பத்திரா தேவி திருவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் கோயில் தலைவர் குமார் தலைமை வகித்தார். மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, நான்கு யாம பூஜைகள் நடந்தது.. பதினான்கு நாட்கள் நீடித்த திருவிழா பெரும் பூஜைகளுடனும், பல்வேறு சடங்குகளுடனும், கலை நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
சிவராத்திரி அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு சிவராத்திரி விழா மாலையில் பஸ்ம அபிஷேகம், அபிஷேகம், தீபகாட்சி மற்றும் யம பூஜையுடன் நிறைவடைந்தது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.