சேலம், ஏப்.22
சேலம்,வரலட்சுமி மஹாலில் இரண்டு நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக சீரடி சாய்பாபாவின் பாதுகை வைக்கப்பட்டது. சுமார் 30,000 மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீரடி சாய் நண்பர்கள் குழு நிர்வாக தலைவர் ஏ.எல்.ஜெயகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் எம்.முருகானந்தம், வி.ஜெயந்தி, கே.பி.ராமசாமி, எஸ்.பழனிச்சாமி, டி.சாந்தம்,வளர்மதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் தரிசன சேவையில் ஈடுபட்டனர்.