தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.16
லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற் கூடம் அமைக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார். இந்த நிழற்கூடத்தின் மூலம் தினசரி பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பயன் பெறுவர் .இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் நித்தியா, நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



