கரூர் மாவட்டம் – ஜுலை – 20
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் சென்னை,கரூர் பண்டத்துக்காரன் புதூர் அரசு மகளிர் கல்வியில் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியில் கல்லூரி இணைந்து நடத்தும் ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்.
கிராம முன்னேற்றத்தில் மாணவ ஆசிரியரின் பங்கு என்ற கருப்பொருளின் அடிப்படையில் 14.07.2024 முதல் 20.07.2024 வரை பண்டத்துக்காரன் புதூர் கிராமத்தில் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு முகாம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. சி. நாகசுப்பிரமணி மேற்பார்வையில் நடைபெறுகிறது,
முதல் நாள் துவக்க விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினர் முனைவர் பா. நடேசன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். அட்வகேட் கண்ணன் செயலாளர் , அரசு மகளிர் கல்வி நிறுவனங்கள் சிறப்புரை ஆற்றினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் ஏனோக் ஜெபசிங் பெட் ஃபோர்டு அவர்கள்
திண்டுக்கல் சக்தி கல்வி நிறுவனங்களில் தலைவர் மருத்துவர் வேம்பனன், தமிழ்நாடு கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கமலா செல்வராஜ் அவர்களும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான வாழ்த்துரை வழங்கினார்கள்.
அரசு மகளிர் கல்வியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருதீதன் மற்றும் பொன்காளியம்மன் கல்வியில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார்கள்.
நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் 100 பேர் கலந்து கொண்ட முகாம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வில் கோயில் தூய்மை பணி, குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு பேரணி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, முதியோர்களை பாதுகாத்தல், போன்ற நிகழ்வுகள் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து நடைபெற உள்ளது.