தேசிய அளவிலான 11 வயதுக்கு உட்பட்டோருக்கான மினி ரோல்பால் போட்டி சனிக்கிழமை முதல் 21-ந்தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதில் தமிழக அணி சார்பில் ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் பங்கேற்கின்றனர். இவர்களில் 3 ஆண்கள், 4 பெண்கள் திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.இதனையடுத்து தமிழக அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள், வீராங்கனைகளுக் கான வழியனுப்பு விழா நிகழ்ச்சிசின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய ரோல்பால் செயலாளர் எம்.பி.சுப்பிரமணியம், மாவட்ட ரோல் பால் செயலாளரும், சர்வதேச நடுவரும்,பயிற்சியாளருமான மாஸ்டர் எம்.பிரேம்நாத்,ரோல்பால் மாநில செயலாளர் கோவிந்தராஜ், கோவை மாவட்ட செயலாளர் ராஜசேகர்,பயிற்சியாளர்கள் தீபக், தங்கலட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்க உள்ளவீரர்,வீராங்கனைகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.



