ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊரணி அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்
ரூ.1.03. கோடி மதிப்பில்
புனரமைப்பு பணி நடந்தது. இயற்கை சூழலுடன் அமைந்த நடை பாதை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் கார்மேகம் தலைமை வைத்தார். துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையர் அஜீதா பர்வீன் வரவேற்றார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எ திறந்து வைத்தார். கவுன்சிலர்
குமார், நகராட்சி பொறியாளர்
பாண்டீஸ்வரி, இளநிலை பொறியாளர்
லட்சுமி, கான்ட்ராக்டர் திருமுருகன்
உள்பட பலர் பங்கேற்றனர்.