பரமக்குடி, அக்.10: பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலை பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மை பணியில் மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. உதவி ஒருங்கிணைப்பாளர்கள் குமரேசன் வரவேற்றார்.
பள்ளியின் தாளாளர் லெனின் குமார் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து குமரக்குடி பகுதியில் உள்ள பள்ளி வளாகம், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று, குமரக்குடி பள்ளி வளாகப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர். என் எஸ் எஸ் திட்டத்தும் குறித்து மாணவர்கள் செயல்படும் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் விவரித்தார்.
திட்ட முகாமில், ஒன்றிய கவுன்சிலர்
சுப்பிரமணியன், வேந்தோனி ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ்,பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். துரைசிங்கம் ஆகியோர் நன்றி கூறினார்.
படவிளக்கம்
பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி என்ன செஸ் திட்ட முகாமில் வேந்தோனி ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.