தஞ்சாவூர். நவ.26
தஞ்சாவூர் அடுத்துள்ள திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி, சிறந்த படைப்புகளுக்கான பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடந்தது .
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கண்ணகி கலைவேந்தன் முன்னிலை வகித்தார்,டாக்டர் சங்கமித்ராஅறிவியல் கண்காட்சி யில் சிறப்பு இடம் பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கி, குழந்தை களுக்கான சத்துள்ள உணவு வகைகள் என்பது குறித்து பேசினார்.
காட்டுக்கோட்டை என் எஸ் கிருஷ்ணன் தொடக்கப்பள்ளி குழு தலைவர்அறிவழகனின் குழந்தை களுக்கான கதையாடல் நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியைகள்
மேரிவெர்ஜினியா, தீபா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னர். ஏற்பாடுகளை ஆசிரியைகள் தனலெட்சுமி, பிரேமலதா ,தெரசா பெஸ்க்கிலா, சினேகா ஆகியோர் செய்திருந்தனர்.
பள்ளி தலைமையாசிரியை கோகிலா வரவேற்றார், ஆசிரியை மஞ்சுளா நன்றி கூறினார்.