திருவாரூர் ஜனவரி 30
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் உள்ள குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு, நீடித்த நிலையான நீர் மேலாண்மை பாதுகாப்பு என்கின்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது நீர் மேலாண்மை குறித்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விஞ்ஞானி சசிகுமார் மேனாள் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி ஒன்றிய தலைவர் குமார் ஒன்றிய செயலாளர் மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.