தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர்.மே.31
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 12-ம் வகுப்பு பொது தேர்வு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2024 -2025 கல்வியாண்டில் 10, 12 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் .மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 -2025 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்தி உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 19 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும, 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 14 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கடந்த ஆண்டு விட தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்தி ய 262 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டன
இனி வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கல்வியாண்டில் இந்த பள்ளிகளின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.