சங்கரன்கோவில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் இந்தியன் தாலுகா சொசைட்டி சங்கரன்கோவில் தாலுகாக்களை மற்றும் தென்காசி மாவட்ட துணை கிளை ஆகியவை சார்பாக இல்லம் தேடி மருத்துவ முகாம் மற்றும் நாகர்கோவில் பெஜன் சிங் கண் மருத்துவமனை ஆகிய மூலமாக சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிபதிகள் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் குமஸ்தாக்கள் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை நடைபெற்றது மேற்படி நிகழ்வில் சங்கரன்கோவில் சார்பு நீதிபதி உயர்திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் சங்கரன்கோவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி உயர்திரு ஆர் நரசிம்மமூர்த்தி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி சிவ ராஜேஷ் ஆகியோர்கள் முகாமை தொடங்கி வைத்தனர் யூத் ரெட் கிராஸ் மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் மருத்துவ உதவிகள் செய்திருந்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கரன்கோவில் ரெட் கிராஸ் தாலுகா கிளை செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் தென்காசி வட்ட க் கிளை செயலாளர் மற்றும் தென்காசி மாவட்ட நோடல் ஆபீஸர் முகமது அன்சாரி நிர்வாக குழு உறுப்பினர்கள் திலகவதி ஜெயச்சந்திரன் மாரியப்பன் ராஜேந்திரன் வழக்கறிஞர் அன்னத்தாய் ஆகியோர் செய்திருந்தனர்



