தென் தாமரைகுளம் ஜன., 6-
கொட்டாரம் அருகில் உள்ள இடையன்விளை சக்தி கிராமம் மன்னராஜா கோவிலில் மார்கழி கொடை விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.விழாவின் 3-ம் நாளான சனிக்கிழமை அதிகாலை பூஜையும் ,4 மணிக்கு அனைத்து சாமிகளுக்கும் அமுதபடைத்து வழிபாடும் நடந்தது.காலை 7:00 மணிக்கு பிரசாதம் வழங்குதலும்.8மணிக்கு சமபந்தி விருந்தும் நடைபெற்றது .இதில் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் .