கன்னியாகுமரி டிச 6
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான வளையப் பந்து போட்டி தக்கலை அமலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான வளையப் பந்து.போட்டியில் 14-வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில்
வாறுதட்டு பள்ளி மாணவி அபிஷிகா இரண்டாம் பரிசும், மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் மாணவர் மெர்சின் மூன்றாம் பரிசும் வென்றனர். 14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவில் மாணவர்கள் மெர்சின், விஜேஷ் ஆகியோர் மூன்றாம் பரிசு வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மார்த்தாண்டம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஷெர்லின் விமல் சான்றிதழும், பதக்கமும் வழங்கி கவுரவித்தார்.