மதுரை பசுமலை மேல் நிலைப் பள்ளியில் தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா அறிவுரையின் படி, பள்ளி தலைமை ஆசிரியை மேரி மற்றும் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன். ஆகியோர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து விதிகள் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது பள்ளி உதவி தலைமையாசிரியர் ரிச்சர்ட் பி ராஜன் வரவேற்புரை வழங்கினார். உதவி ஆய்வாளர் செல்வகுமார் அறிவுரை வழங்கினார்.
சாலை பாதுகாப்பு மன்றச் செயலாளர் தி.மோசஸ்ராஜன்.நன்றியுரை கூறினார்.நுகர்வோர் மன்றச் செயலாளர் பிரகாஷ், மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர். ராபின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.