இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அ.தங்கமணி இயக்கத்தில்
தயாரிக்கப்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். சந்தீஷ் ஐபிஎஸ் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தில் இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களை இயக்கி பொதுமக்களுக்கு பயமுறுத்தும் வகையில் அச்சுறுத்தி இயக்குதல் குடிபோதை மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குதல் சிறுவர்களை வாகனம் இயக்க வைக்கும் பெற்றோர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் எதார்த்தமாக அமைக்கப்பட்டு எளிமையாக அனைவரும் புரிந்து கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்கும் வகையில் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குறும்பட வெளியீடு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை சக காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் குறும்படம் தயாரிப்பாளர் ஆய்வாளர் தங்கமணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும்
இவர் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக இருந்த போது
தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
இவரது தயாரிப்பில் வெளிவந்த குறும்படம் முதல் இடத்தை பிடித்து மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.