திருவாரூர் – மயிலாடுதுறை இடையில் சாலை மறியல். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் மாவட்ட முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் பேரளம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் 100 லாரிகள் மூலமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இயக்கம் செய்யப்பட்டு அரவைக்காக பேரளம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் ஒரு வாரமாக ரயில் வராத காரணத்தினால் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முருகையன், நன்னிலம் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமார், துணை தலைவர் சிவா, ஒன்றியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன்
உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பேரளம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் காவல் துறையினர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக துனை மேலாளர் அற்புதராஜ், உள்ளிட்டார் பேச்சுவார்த்தை நடத்தினர் உடனடியாக நெல் மூட்டைகள் இயக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்
இதன் காரணமாக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.