தஞ்சாவூர் ஏப்ரல் 18.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வரி ன் முகவரி ,மக்களுடன் முதல்வர் ,மூன்றாம் கட்ட முகாம்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களிடம் அளிக்கப்பட்ட கோரிக் கை மனுக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை விபரங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத் துறை ,தாட்கோ , பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, உயர் கல்வித்துறை ,பள்ளி கல்வித் துறை, வேளாண் துறை, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொதுப்பணி துறை, கட்டிடம் மற்றும் நீர்வளத்துறை, நெடுஞ்சாலை துறை போன்ற அனைத்து துறை வாரியாக பொது மக்களின் நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்கள் மீது உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நடவடிக்கைகள் தொடர்பாக விவரங்களை மனுதார ருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் ,மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.



