மயிலாடு துறை மே 15
மயிலாடு துறை மாவட்டம் குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் 1434 – ஆம் பசலி வருவாய் தீர்ப்பாய கூட்டம் நடைபெற்றது. மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த வருவாய் தீர்ப்பாய கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.
இன்றைய வருவாய் தீர்ப்பாயத்தில் குத்தாலம் உள் வட்டத்தில் ,உள்ள கருப்பூர் ,பேராவூர் காஞ்சி வாய் ,என 18 கிராம மக்கள் மனுக்கள் வழங்கினர். இதில் பட்டா கேட்டும், முதி யோர் ஓய்வூதியம், மகளீர் உரிமை தொகை , -கேட்டும் மனுக்கள் கொடுத்தனர். இக்கூட்டத்தில் 2. பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளையும், இரண்டு பேருக்கு இலவச பட்டாக்களும் வழங்கப்பட்டது .கிராம வருவாய் அதிகாரிகளின் -அ. பதிவேடுகளின் கணக்குகளை ஆய்வு செய்தார்.
இந்த வருவாய் தீர்ப்பாய கூட்டத்தில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். இக்கூட்டத்தில் குத்தாலம் வட்டாச்சியர் சத்தியபாமா உட்பட பல வருவாய் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.