கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட்ட மகாதேவகொள்ளஹள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிசெய்து வந்த முருககண்ணன் தனது 60 ஆண்டு பூர்த்தியடைந்த நிலையில் அவரது பனி ஓய்வு பிரிவு உபசரிப்பு விழா போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மகேந்திரன் தலைமையில் நடந்தது, தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கங்கை, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாரதி, மண்டல துணை வட்டாச்சியர் ரகமத்துல்லா, துணை வட்டாச்சியர் (தேர்தல்) சுரேந்தர், வட்ட வழங்கல் அலுவலர் லதா, வட்டத்துணை ஆய்வாளர் சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலையில் பணி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் முருககண்ணன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோருக்கு உறவினர்கள் நடராஜ், வான்மதி நடராஜ், தங்கவேல், வள்ளி தங்கவேல், கிருஷ்ணன்,சந்திரா கிருஷ்ணன், முனிராஜ், சூர்யா முனிராஜ், பவுன்ராஜ், தீபா பவுன்ராஜ், அன்பு, அருண், லோகேஷ், பிரனேஷ்,
லிஷான்யா, ஸ்ரீ நவ், ஜஸ்வின், ஹேமந்த்,
மற்றும் உடன் பணியாற்றிய துறை சார்ந்த அலுவலர்கள்
பொண்ணாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், சசிகுமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் சுஜிமதி, புஸ்பா, கிரண்குமார், அருள்குமார், தேன்மொழி, இளநிலை உதவியாளர்கள் பாலசுப்பிரமணியம், காமாட்சி, தட்டச்சர் மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பழனிவேல், அருண்குமார், லெனின், ராகேஷ்ஷர்மா, ராஜாராம், தேவராஜ், முருகேசன் கோவிந்தராஜ், சுதாகர், சுவிதா, சுவேந்திரன், மாதேஷ், நிள அளவையர் கனபதிராஜன், கிராம உதவியாளர்கள் குமரேசன், செல்வராஜ், பழனிச்சாமி, குமரன், ராமசந்திரன், ராமசாமி, அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதில் வட்டாட்சியர் மகேந்திரன் பணி ஓய்வு பெற்ற முருககண்ணனை வாழ்த்தி பேசி பாராட்டி தனது அரசு ஜீப்பில் முன் இருக்கையில் அமரவைத்து கௌரவ படுத்தி வழி அனுப்பிவைத்தார்.