அரியலூர், நவ;18
அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் இல்ல காதணி விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை கஸ்தூரி கைது குறித்து கேட்ட கேள்விக்கு இது அவசியமற்றது இதில் காயம் படவோ வேதனை படவோ ஒன்றுமில்லை திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்கள் அதை செய்கிறார்கள் அவர் பேசியதில் காயம் பட்டதாக சொல்கிறார்கள்.
நூற்றாண்டுகளாக ஒரு தமிழை பேரினத்தை திராவிடம் என சொல்லி வருகிறார்கள் நாங்கள் எவ்வளவு காயம் பட்டு இருப்போம் என்னுடைய அடையாளத்தை மறைத்து எனது இனத்திற்கு வேறு பெயர் வைக்க நீங்கள் யார்? அப்போது நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருப்போம். இதற்கெல்லாம் சிறைப்படுத்தும் அளவிற்கு ஒரு குற்றமா அதான் எனது கேள்வி? காயம் படுவது என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாடகை வாய்கள் அவர்களின் வலையொலிக்காரர்கள் அவர்களது கட்சிக்காரர்கள் மற்றவர்களை பேசுவதை கேட்கிறார்கள் இல்லையா! ஒவ்வொருத்தரையும் கருத்தியலாக சண்டை போடுவது என்பது வேறு! அரசியலாக மோதுவது என்பது வேறு! கருத்து வைப்பது வேறு! தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் செய்வது குடும்பங்களை பற்றி பேசுவது தாய் தந்தையரை பற்றி பேசுவது பிறப்பை பற்றி பேசுவது அதெல்லாம் இருக்க அதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? வழக்கு கொடுக்க வந்தால் வழக்கை எடுக்கிறார்களா? அவசர அவசரமாக தனிப்படை அமைத்து அவரை கைது செய்து சிறைப்படுத்தும் அளவிற்கு அவ்வளவு பெரிய குற்றமா? சரி பேசினார். தப்பு தான் அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்கள். அதற்கு பிறகு விட வேண்டியது தானே அதற்கு ஒரு பெண்ணை அவசர அவசரமாக வேறு மாநிலத்திற்கு போய் கைது பண்ணி சிறைப்படுத்தும் அளவிற்கு பெரிய குற்றமா?
இந்த நாட்டில் மலையை வெட்டி விற்றவன் வித்து கொண்டிருப்பவன் மண்ணை அள்ளி தின்பவன் ஊழல் லஞ்சத்தில் ஊறி திளைப்பவன்
பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்பவன் கொள்ளை அடிப்பவன் அவன் எல்லாம் வெளியில் தானே இருக்கிறான் என கேள்வி?
மணிப்பூர் கலவரம் குறித்து கேட்ட கேள்விக்கு நீண்ட காலமாக அந்த நிலத்தில் உள்ள சிக்கலாகும் பழங்குடியின மக்கள் மலையைச் சார்ந்த அடிவாரங்களில் வாழும் பழங்குடியின மக்கள் கிறிஸ்தவத்தை தழுவி உள்ளார்கள் கீழே சமநிலை பரப்பில் உயர் மக்கள் அவர்கள் சொல்கிறபடி உயர்சாதி இந்துக்கள் இருக்கிறார்கள் பழங்குடியின மக்களுக்கு இருக்கிற இட ஒதுக்கீட்டை உயர் சாதி பிரிவினருக்கும் உண்டு என சொல்லும் போது தான் பிரச்சனை உண்டாகிறது.
இது உரிமைப் பிரச்சினையாக மாறுகிறது தமிழ்நாட்டில் இருந்து சென்ற நீதிபதி ஒரு தீர்ப்பை கொடுக்க அது பிரச்சினையாக வெடிக்க கீழே இருக்கின்ற மக்கள் பிஜேபி வாக்காளர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் பிஜேபிக்கு எதிரானவர்கள் என்பதால் பிரச்சினை வெடித்தது அவர்கள் உயிரோ பெரிதாக தெரியவில்லை அதனால் இந்த கலவரத்தை இந்த ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தவும் அதை தடுக்கவும் எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இவ்வளவு பெரிய ராணுவ கட்டமைப்பு இவ்ளோ பெரிய அதிகாரம் வைத்துக் கொண்டு சொந்த நாட்டிற்குள் கலவரத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று கொளுத்தியுள்ளார்கள் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் இதற்கு ஒரே முழக்கம் இருக்கிறது அதுதான் பாரத் மாதாஜிக்கு ஜே அவ்வளவுதான் இதுல என்ன கருத்து சொல்வது ஒரு நொடியில் இந்த கலவரத்தை அடக்கலாம் இந்த பிரச்சினையை தீர்க்கலாம் ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த கலவரத்தை ரசிக்கிறார்கள் திட்டமிட்டு இந்த கலவரத்தை உருவாக்கியவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தால் எப்படி இதை தடுப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்