திருப்பத்தூர்:டிச:31, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செல்லும் ஏரிக்கரை பகுதி சாலையில் அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என தேமுதிக கட்சியினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் தின மனுவினை பெற்று அதற்கு தீர்வு காணும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை சேர்ந்த திருப்பத்தூர் நகர கழக செயலாளர் மதன்ராஜ் தலைமையில் மனுவினை அளித்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: திருப்பத்தூர் நகர 36 வது வார்டு பெரிய ஏரிக்கரை சாலையானது திருமால் நகருக்கு செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வரும் நிலையில் தினந்தோறும் அந்த சாலை வழியாக பள்ளி மாணவ, மாணவிகள், திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று வரும் 108 ஆம்புலன்ஸ், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வரும் பிரதான சாலையாக உள்ள நிலையில் தார் சாலைகளின் ஓரங்களில் பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் இல்லாத நிலை உள்ளது.
விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என மனதில் குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனுவினை அளிக்கும்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.