பரமக்குடி,ஆக.3 :
பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரமக்குடியை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி உதவி பொறியாளர் சுரேஷ் வரவேற்றார். துணைத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,தெரு விளக்குகள்,சுகாதார பணிகள் முறையாக நடைபெற வேண்டும் என கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு நகராட்சி ஆணையர் முத்துச்சாமி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் சரி செய்யப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் என தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும். மேலும், சுகாதார அதிகாரிகளும் தினமும் ஒரு பகுதிக்கு சென்று பணிகளை கண்காணித்து வருகின்றனர் எனக் கூறினார்.
மேலும், தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வரவு செலவு மற்றும் தீர்மானங்களை நகராட்சி அலுவலர் ராஜராஜேஸ்வரி வாசித்தார். இந்தக் கூட்டத்தில்
நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம் பரமக்குடி நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.