திருப்பத்தூர்:ஜூலை:10, வாணியம்பாடி உட்கோட்டத்தில் பழுதடைந்த அனைத்து மகளிர் காவல் குடியிருப்பு மற்றும் நாட்றம்பள்ளி காவல் குடியிருப்புகளை மறு சீரமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டு பணிகளை மேற்கொள்ள துவக்கி வைத்தார். வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நகர காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணியம், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, நாட்றம்பள்ளி காவல் நிலைய லதா, உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.



