தூத்துக்குடி, செப். 22 –
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் தூத்துக்குடி நடத்திய மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மேயர் ஜெகன் பெரிய சாமி வழங்கினார். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் , முன்னாள் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பெரியசாமி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி , அசோசியேஷன் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் , பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



