திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக ஆயர் பேரவையின் பி.சி. , எம்.பி.சி, டி.என்.சி. பணிக்குழு சார்பில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி. சலுகையை மீண்டும் பெற்றிட வலியுறுத்தி திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பணிக்குழு தலைவரும், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயருமான தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். மறை மாவட்ட குருகுல முதல்வர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். இதில் 150 ஊர்களின் நிர்வாகிகளும் பத்துக்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் என 500 பேர் பங்கு பெற்றனர்.அதனை தொடர்ந்து பணிக்குழு தலைவரும், திண்டுக்கல் மறை மாவட்ட ஆயருமான தாமஸ் பால்சாமி பேசியதாவது,மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் – வன்னியக் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 16.10.1990 தேதியில் வெளியிட்ட தமிழக அரசாணை எண் 25 மூலம் வன்னிய கிறிஸ்தவர்களை
2ம் தர குடிமக்களாக நடத்தி வருகிறது.
நமது சமுதாய அமைப்புகள் பி.சி, எம்.பி.சி, டி.என்.சி. பணிக்குழுவும் தொடர்ந்து நடத்திய சமுதாய நீதிக்கான போராட்டத்தின் கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டபோது க வ னத்திற் கு கொண்டுவரப்பட்டது.
அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, இந்த சமூக அநீதியை களைவேன் வடமதுரை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உறுதியளித்தார்.4 ஆண்டுகள் முடிந்து விட்டது.அடுத்த சட்டமன்ற தேர்தல் ஒரு வருடத்தில் வர இருக்கின்றது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று நினைவூட்டுவோம். ஒரு முறை அல்ல, 2 முறை இந்த உரிமை கொடுக்கப்பட்டு பறிக்கப்பட்டுள்ளது. 2 முறை பெற்ற பார்வையை இழந்துள்ளோம்.இதை வலியுறுத்தி வருகின்ற மே 24 – ஆம் தேதி திண்டுக்கல் வெள்ளோடு அருகே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவ வன்னியர்கள் ஒன்று கூடி அரசுக்கு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றகோரி மாநாடு நடத்த உள்ளோம். எனவே தமிழக அரசு இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்றார்.இதனை தொடர்ந்து மணிக்குண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தை சாம்சன் ஆரோக்கியதாஸ், வழக்கறிஞர் எர்னெஸ்ட், பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பங்குத்தந்தை ஜஸ்டின் நன்றி கூறினார்.



