தஞ்சாவூர். அக்.24.
தஞ்சாவூரில் நடைபெற்ற உலக திருக்குறள் பேரவை விழாவில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் உலக திருக்குறள் பேரவை சார்பில் பொறியாளர் அரங்க தங்கராசன் எழுதிய கலைஞர் நூற்றாண்டு வெண்பா மாலை நூல் வெளியீட்டு விழா, மக்களவை உறுப்பினர் ச.முரசொலிக்குவரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முனைவர் கு.வே. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் மக்களவை உறுப்பினர் ச.முரசொலிக்கு தேவாரம், திருவாசகம், திருக்குறள் வான்சிறப்பு போன்றவற்றை பாடிமங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொறியாளர் அரங்க தங்கராசன் எழுதிய கலைஞர் நூற்றாண்டு வெண்பா மாலை நூலை மக்களவை உறுப்பினர் ச.முரசொலி வெளியிட்டார். இந்நூலை உலக திருக்குறள் பேரவைத்தலைவர் செ.ப அந்தோணிசாமி முன்னாள் நகர் மன்றத் தலைவர் இறைவன், சதய திருவிழா குழு தலைவர் து.செல்வம் மார்னிங் ஸ்டார் பள்ளி தாளாளர் அறிவானந்தம், சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி.மாறன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர் . பேராசிரியர் கலியபெருமாள், முனைவர் சண்முகம் செல்வ கணபதி, புலவர்.மா கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர் பொறியாளர் அரங்க .தங்கராசன் ஏற்புரை ஆற்றினார்.
விழாவில் தஞ்சாவூர் தெற்கு அலங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட திருவள்ளுவர் வணிக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். தஞ்சாவூரில் 1333 திருக்குறளிலும் ஒப்பித்த 48 குழந்தைகளையும் நாடாளுமன்றத்தில் சுற்றி பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க தமிழக முதல்வர் மூலம் மக்களை உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
முன்னதாக உலக திருக்குறள் பேரவை செயலர் பழ. மாறவர்மன் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக சந்திரஜோதி நன்றி கூறினார்