வேலூர் 15
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்அரசம்பட்டு நொபின் பாபு. என்பவர் பாலாத்துவண்ணான் ஊராட்சி சறுக்கு மலை அடிவாரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது 1.5 ஏக்கர் நிலத்தோடு சுமார் 200 ஏக்கர் நிலத்தில் ஏராளமானோர் விவசாயம் செய்கின்றனர். இந்த விவசாய நிலங்களுக்கு செல்லவும், விவசாய விளைபொருட்களை கீழே கொண்டு செல்ல முறையான வழி இல்லை. எனவே அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்காக அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை அங்கு சாலை அமைத்து தர எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே அப்பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி மக்கள் ஊழல் தடுப்பு இயக்கம் மற்றும் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில இளைஞர் அணி செயலாளர் எம்.இளவரசன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்துவாச்சாரி பொறுப்பு காவல் ஆய்வாளர் சீனிவாசன் முக்கிய நிர்வாகிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அனைத்தும் தகவல்களையும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் வரும் பிப் 18 க்குள் (அ) ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சந்திப்பின் போது சர்வதேச தலைவர் எஸ்.ஜி.எம்.ரமேஷ், சர்வதேச துணைத்தலைவர் டாக்டர் கலைச்செல்வன், மாநில பொதுச்செயலாளர் கே.மதுசூதனன் வேலூர் மாவட்டத்தலைவர் என்.ஜெய்கணேஷ் உடனிருந்தனர்.