கிருஷ்ணகிரி,டிச.1- வருகின்ற 02-ஆம் தேதி கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தனது அறிக்கையில் கூறியதாவது- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காந்தி நகர் அம்பேத்கர் காலனி பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 110 வீட்டு மனை இலவச பட்டா வழங்குவதாக அதே பகுதியில் உள்ள பன்னியள்ளி கிராமத்தில் நில எடுப்பு செய்து பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அந்த மக்களே சென்று குண்டும் குழியுமாக இருந்த பகுதியை ஜேசிபி மூலம் நிலத்தை சமன் செய்து வருகிற போது, அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதியினுடைய ஆட்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த இடத்தில் பட்டா வழங்கக்கூடாது என மறுப்பு செய்துள்ளனர். இதைதொடர்ந்து கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அதை வழங்க முடியாது என அறிவித்ததின் பேரில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்து வருகிற திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில் அந்த கிராம மக்களுடைய ஜனநாயக உரிமையான வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை திரும்ப ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டு இந்த போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



