சிவகாசி பிப் 14
சிவகாசியில் உள்ள சிவன் கோவில் பகுதியை சுற்றி நான்கு ரத வீதி உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவிலான கடைகள் உள்ளன. காய்கறி,மளிகை,ஜவுளி,நகை கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான கடைகள் இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது.கடைக்கு முன் உள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலை மிகவும் குறுகலாக மக்கள் பயன் படுத்த முடியாத வகையில் நெரிசலாக இருந்தது. இது பற்றிய புகார் வந்ததை அடுத்து சார் ஆட்சியர் பிரியா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி திட்டமிடுநர் மதியழகன், ஆய்வாளர் சுந்தர வள்ளி ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றுவது குறித்து வணிக நிறுவனங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.அதன் பிறகும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை ஜே சி பி இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்புகள் நடை பெறா வண்ணம் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தால் மட்டுமே மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது தடுக்கப்படும். பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கையாக இல்லாமல் தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.