திண்டுக்கல் மே. 13
திண்டுக்கல் மேட்டுப்பட்டி இளங்கதிர் கபாடி கழகம் நடத்திய 40ம் ஆண்டு மாநில அளவிலான மதநல்லிணக்க கபாடி தொடர் போட்டியானது கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மேட்டுப்பட்டி பாஸ்கு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தலைசிறந்த 40 அணிகள் பங்குபெற்றன.
முதல் பரிசு ரூபாய் 40040 ஐ KK GYM Boys அணியும் இரண்டாம் பரிசை மகா காளியம்மன் அணியும் மூன்றாம் பரிசை இளங்கதிர் அணியும் நான்காம் பரிசை MEG மெட்டூர் அணியும் பெற்றன. முதல் பரிசை திரு.X.S சேவியர் பிரகாஷ் 45வது வார்டு திமுக செயளாலர், முதல் பரிசு கோப்பை திரு. திபுர்சியாஸ் வழங்கினார், இரண்டாம் பரிசு ரூபாய் 30030 ஐ லயன். K.ரத்தினம் மூன்றாம் பரிசு ரூபாய் 20020 ஐ P.பிரிட்டோ 42.வது வார்டு திமுக செயளாலர் நான்காம் பரிசு ரூபாய் 20020 ஐ P.ஜெயகுமார் மற்றும் C. லட்சுமி வழங்கினர். அனைத்து பரிசுகளும் இணையான கோப்பை வழங்கப்பட்டது.
விழாவில் மெர்சி பவுண்டேசன் நிர்வாகி மெர்சி செந்தில்குமார் அவர்களும் திண்டுக்கல் மாநகராட்சி எதிர் கட்சி தலைவர் C.S. ராஜ் மோகன் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மேட்டுப்பட்டி பங்குதந்தை ஊர் நாட்டாமை சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு X.S.சேவியர் பிரகாஷ், பிரிட்டோ, திபூர்சியஸ், ஆகியோர் தலைமை தாங்கினர்.விழா ஏற்பாடுகளை தலைவர் ராஜேந்திரன் செயளாலர் ரங்கராஜ் பொருளாளர். பந்தன், கோபால், ஜஸ்டின் திரவியம், வினோத் மைக்கேல் ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இறுதியில் இளங்கதிர் கபாடி கழக துணை செயலாளர் பாஸ்டின் நன்றியுரை கூறினார்.