மதுரை டிசம்பர் 2,
மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு!
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மீனாட்சிபுரம் மேட்டுக்காலனியில், ஆதி திராவிடர் மயானத்திற்கு செல்லும் வழியில் சில மாதங்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாலம் கட்டப்பட்டது. இதனால் நான்கு அடி உயரமுள்ள பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பாலம் மீது ஏறி இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பாதைகள் இல்லாததால், பாலம் மீது எகிறி குதித்தபடி இறந்தவரின் சடலத்தை சுமந்து சென்றனர். இதுகுறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இதையடுத்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி உத்தரவின் பேரில், ஊராட்சி நிர்வாகத்தினர் மயானத்திற்கு செல்லும் நான்கு அடி நீளமுள்ள பாலத்தின் இருபுறமும் டிராக்டர் மூலம் மணல்களை கொட்டி பாதையை சீரமைத்தனர். இதனைத் தொடர்ந்து, மீனாட்சிபுரம் மற்றும் மேட்டுக்காலனி பொதுமக்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தியை பாராட்டி நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.