சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வசதிக்காகவும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக இரண்டாவது நுழைவு வாயில் அமைக்க ஏதுவான இடத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ ஆய்வு செய்தார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மேற்குப்பகுதியில் ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சிகிச்சை பெற வருவோரின் வாகனங்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் மருத்துவமனையின் வட பகுதியில் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மாவட்ட கலெக்டர் கமல் கிஷோரிடம் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இரண்டாவது நுழைவு வாயில் அமைப்பதற்கு ஏதுவான இடத்தை மருத்துவமனையில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு செய்தார்.



