தஞ்சாவூர் ஆகஸ்ட். 21
தஞ்சாவூர் ரயில் நிலைய வளாக த்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மழை நீர் சேகரிப்பு அவசியம் குறித்த பிரச்சார வாகனத்தையும் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 2024 ஆம் ஆண்டிற்கான மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சார வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்பு ணர்வு குறும்படம் பொதுமக்களு க்கு ஒளிபரப்பப்பட்டது.
நீர் பாதுகாப்பு என்ற நோக்கத் தினை அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அவசியம் எனக்கருதி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நீரின் பயன்பாட்டிற்கும், நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அவசியம் நிறுவிட வேண்டும்.
வடகிழக்கு பருவமழைக் காலம் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக ளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமத்து மழைநீர் சேகரித்து நிலத்தடி நீர் வளத்தினை மேம்படுத் திட வேண்டும் என்ற நோக்கத்துட ன் பேரணி நடைபெற்றது.
பேரணி தஞ்சாவூர் ரயில் நிலைய த்திலிருந்து அண்ணா சாலை வரை பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வட்ட மேற்பார்வை பொறியாளர் வசந்தி, கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராமமூர்த்தி, கிராம குடிநீர் திட்ட உப கோட்டம் தஞ்சாவூர் உதவி நிர்வாக பொறியாளர் ஜீவ சங்கர், துணை நிலைநீர் வல்லுநர் மற்றும் அனைத்து நிலை பொறியாளர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.