குமரி மாவட்டம் திங்கள்நகா் கால்நடை மருந்தகத்தில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அழகுமீனா ஆணைக்கிணங்க, மண்டல இணை இயக்குநரின் அறிவுறுத்தலின் பெயரில், தக்கலை கோட்ட உதவி இயக்குநா் மருத்துவா் எட்வா்ட் தாமஸ் தலைமையில் திங்கள்நகா் கால்நடை மருந்தகத்தில் இப்பணி நடைபெற்றது.திக்கணங்கோடு ஊராட்சிப் பகுதியில் பிடிக்கப்பட்ட 20 தெரு நாய்களுக்கு இங்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.



