சங்கரன்கோவில். அக்.5.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் 121 வது பிறந்த தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி வீரவணக்கம் மரியாதை செலுத்தப்பட்டது .இதில் மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளர் செண்பக விநாயகம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், கடற்கரை, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி சார்பு அணி தலைவர்கள் வக்கீல் அணி முத்துராமலிங்கம், மகளிர் அணி சிவசங்கரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராயல்கார்த்தி, ராஜராஜன் மற்றும் ஜெயக்குமார் அஜய்மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.