ஊட்டி. ஜன. 07.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நீலகிரி மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியின் செயலாளர் பா.மு முபாரக் அறிவுரைப்படி மாவட்ட திமுக . துணை செயலாளர் ரவிக்குமார் இறுதி வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டார் உடன் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.