சென்னை, ஜூன்- 22,
மைவால் டி.எச்.வி பற்றி லான்செட் மருத்து இதழில் வெளியிட்டு இருப்பது எங்கள் தயாரிப்புக்கு கிடைத்த பெருமை என்று டாக்டர் ஜி.செல்கோட்டு வேலு தெரிவித்தார்.
இதயம் ஆரோக்கியத்துடன் செயல்பட அயோடிக் வால்வின் இயக்கம் மிகவும் இன்றியமையாதது.
இயற்கையான அயோர்டிக் வால்வுகள் சரியாக செயல்படாத போது இதயத்தில் மட்டுமல்ல உயிருக்கே ஆபத்தாக முடியும் .இக்குறைபாட்டை போக்குவதற்காக இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனமான மெரில் லைஃப் சயின்சஸ், மைவால் டிரான்ஸ்கேட்டர் ஹார்ட் வால்வுகளை தயாரிக்கின்றது.
இந்த நுட்பமான மருத்துவ சாதனம் தற்போது அமெரிக்ககா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மலேசியா போன்ற 135 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாக பயன்பட்டு வருகிறது. மைவால்
இந்தியாவிலேயே தயாரிக்கபடுவதால் இதன் விலையும் மலிவானதாக இருக்கிறது.
இதுகுறித்து பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் பாம்பாக் இருதயநோய் நிபுணரான டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர், இண்டர்வென்ஷனல் இதய நோய் நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு
இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் டாக்டர் ஜான் ஜோஸ் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில்
தெரிவித்ததாவது:-
மைவால் டி.எச்.வி ஆராய்ச்சி செய்து மேம்படுத்தும் இந்தியாவின் முதல் மருத்துவ சாதன நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். லான்செட் மருத்து இதழில் இடம் பெற்றிருப்பது மைவால் டி.எச்.வி முக்கியத்துத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், இது இதய வால்வு சிகிச்சையில் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி, இருதய சிகிச்சையில் புதிய தளங்களை அமைக்கும் இந்தியாவின் திறனை நிரூபித்துள்ளது. இந்த சோதனையானது ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் வெற்றியை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்த ஆராய்ச்சியின் வெளியீடு இந்திய சாதனத் துறைக்கு மட்டுமின்றி, உலகளாவிய அயோர்டிக் ஸ்டெனோசிஸ் நோயாளிக்கு பயனுள்ளதாக அமையும் .
இதன் இடைநிலை விட்ட அளவு மிகவும் துல்லியமாக இருப்பதால் நோயாளிகளின் நீண்ட கால பயன்பாட்டிற்கு 10 ஆண்டுகள் வரை உதவிகரமாக இருக்கும்..
மைவால் டி.எச்.வி தொடர்கள் வழக்கமான அளவுகள் (20 மிமீ, 23 மிமீ, 26 மிமீ, 29 மிமீ) மட்டுமல்லாமல் இடைநிலை (21.5 மிமீ, 24.5 மிமீ, 27.5 மிமீ) மற்றும் கூடுதல்-பெரிய அளவுகளையும் (30.5 மிமீ மற்றும் 32 மிமீ) வழங்கும் பல வகை அளவுகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ள அளவு மேட்ரிக்ஸ் பொருத்தமான வால்வு அளவைத் தேர்ந்தெடுக்க இருதயநோய் நிபுணர்களுக்கு உதவுவதோடு, பொருத்தமற்ற பெரிய அல்லது சிறிய அளவு உபயோகத்தை தவிர்க்கிறது என்று தெரிவித்தனர்.