தருமபுரி மாவட்டம், ஏப்.22
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், கஞ்சல் நத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது . இந்த திட்ட முகாமில் 250 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினர். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலை வகித்தார். பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கூறியதாவது. கஞ்சல் நத்தம் கிராமத்தை சுற்றி உள்ள ஏரியூர், ஈச்சம்பாடி, கொங்கரப்பட்டி உள்ளிட்ட குக் கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெற வேண்டும். என்ற நோக்கில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடத்தப்பட்டது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கத்தை இணையதளம் மூலமாகவோ, கிராமபுற அலுவலகங்களில் மூலமாகவோ, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம் . தருமபுரி மாவட்ட பொதுமக்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். முகாமில் தருமபுரி ஆர்டிஓ காயத்ரி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன், தாசில்தார் பிரசன்னா, கைம்பொன் நல வாரிய உறுப்பினர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.