கோவை மாவட்டம்
சூலூரில் மத்திய அரசின் 2025 – 2026 ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து 60 லட்சம் கோடி ரூபாய் வரியாக பெற்றுவிட்டு 2000 கோடி ரூபாயை மட்டும் தமிழக அரசுக்கு ஒதுங்கி உள்ளது.மேலும்
தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதியினை தராமல் தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்களிடம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பற்பசை முதல் காலில் அணியக்கூடிய காலணி வரை ஜிஎஸ்டி வரியால் மக்களை சுரண்டி வரியினை பெற்றுக் கொண்டு திரும்பி மக்களின் வளர்ச்சிக்கு தராததை கண்டித்து திமுக தலைமை செய்தி தொடர்பு இணைச் செய லாளர் தமிழன் பிரசன்னா கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.