தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமருல் ஜமான் தலைமை வகித்தார். தமுமுக நகர செயலாளர் முகம்மது அசாருதீன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர்
துல்கர்னை சேட் , மாவட்ட செயலாளர்
அப்துல் முத்தலிப், மாவட்ட பொருளாளர் அன்சாரி, மாநில தொண்டரணி
பர்க்கி, மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு அணி செய்யது சபிப்புல்லா,
மருத்துவ சேவை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், தொண்டர் அணி மண்டல செயலாளர் ராஜா முகம்மது, ஊடக அணி மாவட்ட பொருளாளர் அமானுல்லா,
MTS மாவட்ட செயலாளர் வருசை முகமது அப்பாஸ் மந்திரி வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் சேக் முகமது ஷா ரஹ்மத்துல்லா பசிர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமுமுக தலைமைக் கழக பேச்சாளர்
கோவை செய்யது தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது, திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாக்ளா, முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பலம்,
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேணுகோபால், சி.பி.எம் மாவட்ட செயலாளர் மோகன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ரானா ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.