ராமநாதபுரம், மார்ச் 14-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் தலைவர் காதர் தலைமையில் சமூக சேவை செய்த பார்வதி இளங்கோ அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர். தமுமுக செயளாலர் முகம்மது மைதின் வரவேற்புரை நிகழ்த்தினார் தொண்டியில் சுமார் 30 ஆண்டுகளாக குறிப்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும்
தொண்டி சுற்று வட்டார மக்களுக்கும் 24 மணி நேரமும் பார்வதி டாக்டர்இளங்கோ அவர்கள் தன்னலம் பாராமல் மருத்துவ சேவை செய்து வருகிறார். இவரது மக்கள் நலன் சேவையை பாராட்டி
பார்வதி டாக்டர் இளங்கோ அவர்களுக்கு மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்சா விருது வழங்கினார். மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய நபிகளாரின் சமூக உறவு என்ற புத்தகத்தை பரிசளித்தார். தமுமுக தொண்டி பேரூர் தலைவர் காதர் குர்ஆன் பரிசளித்தார். முஸ்லிம் மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் செரிபா ஜைனுல்ஆபிதின் முஸ்லிம் மகளிர் பேரவை மாவட்ட பொருளாளர் 14 வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு மகளிர் அணி தொண்டி பேரூர் செயலாளர் நாச்சியா ஆகியோர் பார்வதி டாக்டர் இளங்கோ அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர். இந்த நிகழ்வில் மமக மாவட்ட துனை செயலாளர் 15வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ஊடக அணி மாவட்ட செயலாளர் பகுருல்லா மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் செயலாளர் பரக்கத் அலி தமுமுக தொண்டி பேரூர் பொருளாளர் அப்துல்லா மீரான் ஜாசிர் ஹபிப் ரஹ்மான் மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மம்மி என்று மக்களால் அழக்கப்படும் பார்வதி டாக்டர் இளங்கோ அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.