சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு சிவகங்கை ஆகியவைகளின் சார்பில் சொந்த நூலகத்திற்கான விருது-2025யினை முனைவர் இரா.தங்கமுனியான்டி அவர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட நூலக அலுவலர் திருஞானசம்பந்தர் உட்பட கலந்து கொண்டனர்.



