நாகர்கோவில் மார்ச் 6
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் நேற்று நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்றபின் கருத்து:
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் தொல்.திருமாவளவன், முத்தரசன், வை.கோ, கமல்ஹாசன், பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்களவை தொகுதிகள் கணிசமாக குறையும் என்பதுடன், தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறையும் அபாயம் ஏற்படும். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் அமையும். தற்போது, தமிழகத்தில் விவசாயம், சிறு, குறு தொழில்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையும் அதிகரித்துள்ளது.
எனவே, தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில், கருத்து வேறுபாடுகளை களைத்து அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து நமது உரிமைக்காக போராட வேண்டும் என பேசினார்.



