திருப்பத்தூர்:செப்:10, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பணிச்சுமைகள் அதிகமாக இருப்பதாகவும், வேளாண்மை துறை பணியாளர் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணிப்பதும், டிஜிட்டல் கிராப் சர்வீஸ் பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமித்திடவும், கடந்த 8.01. 2024 அன்றைய தினத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை உடன்பாட்டை நிறைவேற்றவும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன், வட்டத் தலைவர் பெருமாள், கோட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் திருப்பத்தூர் வட்டார பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் கண்டன கோசங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.



