தேனி.
தேனியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. மனுவில் கூறியதாவது. QPMSஎன்ற ஒப்பந்த நிறுவத்தின் வாயிலாக சலவை,தூய்மை மற்றும் இதர பணியாளர்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் இடைத்தரகர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும்,கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களின் நலன் கருதி அரசு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும்,ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் தலையிட்டு குறைந்தபட்ச ஊதியம் வாரம் ஒரு முறை விடுப்பு போன்ற தொழிலாளர்கள் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நிலுவையில் உள்ள ESi, PF போன்றவற்றை உடனே வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்களின் உழைப்பில் அலட்சியம் காட்டும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு புறம் இருக்க தன்னலன் பாராமல் கொரோனா காலத்தில் களப்பணியில் ஈடுபட்ட இந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். தற்பொழுது சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் விடியல் அரசு உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் கூறினர். இந்த ஆர்ப்பாட்டம் மேற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்கள் நீலக்கனலன்,மாவீரன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட,நகர,ஒன்றிய, மகளிர் அணி நிர்வாகிகள் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.