நாகர்கோவில் ஜூலை 27
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்களுக்கு பணிநேரத்தில் குடிநீர் கழிப்பிடம் சொந்த ஊரின் அருகில் பணி செய்தல் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அதிகாரிகளின் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்து வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதி நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தொழிலாளர்கள் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய கூட்டத்தில் முடிவு. குமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் விவாதத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் குடிநீர் கழிப்பிட வசதி சொந்த ஊரின் அருகாமையில் பணியாற்றுதல் அடிப்படை வசதிகள் ஏதும் மறுக்கப்படுவதாகும், செய்தி தரப்படவில்லை என்றும் அதே வேளையில் வார விடுமுறை மறுக்கப்படுகிறது அதையும் மீறி வார விடுமுறை எடுத்தால் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டி அந்த ஒரு நாள் இயக்கப்படாது இதனால் அப்பகுதியில் ஆபத்தில் சிக்குவர்களை மீட்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் மனித உரிமை மீறல் தொழிலாளர்களை துன்பப்படுத்துதல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதை கண்டித்து வருமே எட்டாம் தேதி நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.