வேலூர்=05
வேலூர் மாவட்டம் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவனயீர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மு. குப்புராமன் மாவட்ட தலைவர் மா. அருணகிரிநாதன் ஆகியோர் தலைமையிலும் நடைபெற்றது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாவட்ட செயலாளர் டே .மைக்கேல்ராஜ் வரவேற்புரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் மாவட்ட பொருளாளர் பொன்னுரங்கம் நன்றியுரையாற்றினார்.