சென்னை, செப்டம்பர்-10, கொல்கத்தா முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து
கொடூரமாக கொலை செய்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இதுவரையில்
நீதி கிடைக்கவில்லை .
இதனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஃபாக்சி, ஆக்சி, சி.எம்.எஸ், ஏ.டி.என், எம்.எஸ்.எம், ஆர்.சி.ஓ.ஜி, எம் .எஸ். யு .எம்
ஆகிய மகளிர் மருத்துவ அமைப்புகள் இணைந்து கறுப்பு பலூன் பறக்க விட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்சி 2013 அமைப்பின் தலைவரும் மற்றும் பெண்களுக்கு எதிரான தடுக்க, தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஜெயராணி காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
நாடு முழுவதும் உள்ள பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதிக்க பட்டவர்களுக்கு நீதி கேட்டும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் முயற்சிகளை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு மருத்துவ அமைப்புகளுடன் இணைந்து போராடுகிறோம்.
கொல்கத்தா மாணவி படுகொலை விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடந்து தண்டிக்கப்பட வேண்டும் .
இதுபோன்ற குற்றங்களுக்கான தண்டனை அதிகப்படுத்த வேண்டும் .
கொல்கத்தா அசம்பாவிதம் நடந்து ஒருமாதம் கடந்து விட்ட நிலையில் இதுவரை நீதி வழங்கப்படவில்லை .
உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு கண்காணிப்பது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறினார்.