நாகர்கோவில் ஏப் 10
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றிய அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைப்பதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஏப்ரல் 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, இறச்சகுளம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட அருள்ஞானபுரத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு அனுமதி தராமல் திட்டமிட்டு நாடகமாடி பட்டா இடத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ளது என்று அண்ணல் அம்பேத்கர் சிலையை அதிகார துஷ்பிரயோகம் செய்து கையகப்படுத்த நினைக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உரிய அனுமதி வழங்க கோரியும் அனுமதி வழங்கும் வரை ஏப்ரல் 14 முதல் தீர்வு காணும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள
அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பு நடத்த இருப்பதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்து மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.



